நியாயம் கேட்கும் மனிதர்

ஓர் அழகிய பூவைக் கண்ட மனிதர்
அதை கையாளும் விதமோ பல....

வாசனையில் மயங்கி
பறித்து முகர்ந்து எறிவர்,

அதன் அழகில் மயங்கி
தன்னை அழகாக்க தலையில் சூடுவர்,

சம்பிரதாயம் என கூறி
பறித்து பாழ்படுத்துவர்,

இதழ் பறித்து
உண்டு மகில்பவரும் உளர்,

ஒரு சிலரே அழகாய்
அதன் போக்கில் ரசித்து மகிழ்வார்

ஓர் பூவையை காணும் விதம்
பலவாக மாறும்போது மட்டும்

கடவுளை குறை கூறும்
விந்தை மனிதரே!

பூவும் பூவையும் அவன் படைப்பில்
சமனாகும் போது....

உன் கேள்வியின் அர்த்தம் தான்....?

எழுதியவர் : (6-Sep-14, 8:41 pm)
பார்வை : 65

மேலே