சிந்தனைச் சிதறல்கள் 01

உயரத்தில் இருந்தும்
கீழே இருப்பவர்களை
உயர்த்த நீளும்
ஒரே கை
மழை!
-------------------
புத்தரானால் என்ன
இயேசுவானால் என்ன
சமாதானத்தைச் சொல்பவர்களெல்லாம்
செத்துக்கொண்டிருக்கிறார்கள்..
சண்டைமட்டும்
நடந்துகொண்டுதான் உள்ளது...!
---------------------------
எத்தனையோ கவிதைகளைப்
படித்துப் பார்த்துவிட்டேன்..
கோனார் உரை கிடைக்கவில்லை
கவிதை எப்படி எழுதுவது என்பது பற்றி
அதனால்தான் நான் இன்னும்
கவிதை எழுதவே இல்லை!!!
---------------

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (6-Sep-14, 8:51 pm)
பார்வை : 88

மேலே