ப்ரியாவின்-காதலன் வர்ணிக்கிறான்

ப்ரியாவின்-என் காதலன் எனை வர்ணிக்கிறான்......!!!

வெண் பூக்கள் சூடிய
தேவதையே-நீ
பெயர் சூடா பூ......!!

நீ
புன்னகைக்கும் போது
சுருங்கிக்கொள்ளும்
விழி வெண்படலத்தில்
வானவில் மடித்து
வைக்கப்படுகின்றது.....!!

உன் வாசம் வைத்தே
தேனீக்கள் அழகான
மலர்களின் வளரிடம்
அறிகின்றன......!!

உன் ஒளிவீசும்
கன்னங்கள் வழியே
நட்சத்திரங்கள் முகம்
பார்த்துக்கொள்கின்றன.......!




-போதும் பா தாங்க முடில.....!!

எழுதியவர் : ப்ரியா (6-Sep-14, 8:38 pm)
சேர்த்தது : PRIYA BALASARAVANAN (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 97

மேலே