கொஞ்சம் சொல்லிக்கொடு- உன்னைவிட அதிகமாய் எப்படி காதலிப்பது

நிற்க தெரியாதோ-என் கால்களுக்கு
உன் வரவை எதிர்பார்த்து
வீதிக்கும் வீட்டிற்கும் ஓடுகிறது...!

பார்க்க தெரியாதோ-என் விழிகளுக்கு
உன்னை காணவிடாது இமைகள்
அடித்து சண்டை போடுகிறது...!

பேச தெரியாதோ-என் இதழ்களுக்கு
வார்த்தைகளின்றி மெளனமும் சிரிப்பும்
வேகமாய் தலையசைத்து கிடக்கிறது...!

தூங்க தெரியாதோ-என் இரவுகளுக்கு
கனவில் கலவரமாய் கண்டு
கலைந்து கலைந்து விழித்தெழுகிறது...!

நினைக்க தெரியாதோ-என் மனதிற்கு
நிகழ்வதை மறந்து தனியே
நிகழா உலகிற்கு செல்கிறது...!

காதலிக்க தெரியாதோ-என் பெண்மைக்கு
உன் காதலை சொல்லியும்கூட
உணர்வுகளற்று உயிர் பெற்றிருக்கிறது...!

காத்துக்கிடக்க தெரியாதோ-என் பதிலுக்கு
கேள்வியே உன் கேள்விக்கு பதிலாய்
"கொஞ்சம் சொல்லிக்கொடு
உன்னைவிட அதிகமாய்
எப்படி காதலிப்பதென்று...????"

எழுதியவர் : மணிமேகலை (6-Sep-14, 8:34 pm)
பார்வை : 473

மேலே