அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

உண்ண உணவு
உடுத்த உடை
இருக்க இடம்
இவைகளுள்
எவையுமின்றி
அகதியாய் நீ
அலையினும்
அகிலமே உன்னை
இகழினும்
உனக்கு நீ
உண்மையாய்
இருப்பின்
உன் வாழ்க்கை
அழகானதே.

எழுதியவர் : ச.அறிவுச்செல்வன் (23-Aug-14, 10:21 pm)
பார்வை : 146

மேலே