எது அழகு
நீ அழகா -அல்ல
நான் அழகா ...
உன்னைப் பார்க்கும் என் கண்கள் அழகா -இல்ல
என்னைப் பார்க்கும் உன் கண்கள் அழகா .....
நீ என்னை பார்த்து சிரிப்பது அழகா -இல்ல
அதை கண்டு வெட்கப்படுவது அழகா ...
அவன் நெற்றி அழகா -இல்ல
அதிலிருந்து வழியும் வியர்வை அழகா ...
உன்னை காண தவிப்பது அழகா -இல்ல
உன்னைக் கண்டு துடிப்பது அழகா .....
தலை நிமிர்த்து நடப்பது அழகா -இல்ல
உன்னை கண்டு தலை குனிவது அழகா ...
உன் விரல்கள் அழகா -இல்ல
என்னை தீண்டும் பொழுது என்னில் ஏற்ப்படும் மாற்றம் அழகா ...
உன் பிரிவு அழகா -இல்ல
அதை நினைத்து ஏங்குவது அழகா ...
என்னருகில் நீ இருப்பது அழகா-இல்ல
உன்னருகில் நான் இருப்பது அழகா ...
உன் முத்தம் அழகா -இல்ல
அதிலிருந்து வரும் சத்தம் அழகா ...
உன் கைகள் அழகா -இல்ல
அக் கைகள் என்னை அணைப்பது அழகா ...
உன் பெயர் அழகா -இல்ல
அப் பெயரை உச்சரிக்கும் என் உதடுகள் அழகா -அல்ல
அதை கேட்கும் என் காதுகள் அழகா ...
இதைவிட அழகானது காதல்
காதல் என்பது வரம் அல்ல
சாபம் -அச்
சாபத்தை வேண்டாமல் இவ்வுலகில் யாரும் இல்லை ...