எழுத்து
மற்றவர் காலில் நான் விழும் போது
என் சிரம் இம்மண்ணையே
நோக்கி கொண்டு இருக்கிறது
ஆனால்
ஆசிர்வதிபவர் சிரமோ என் முதுகை
நோக்கி கொண்டு இருக்கிறது
ஆசீர்வதமோ ஆத்திரமோ
அதை முகத்திலே காட்ட வேண்டும்
என் தமிழ் அன்னையிடம் கற்ற
முதல் பாடம்
எனவே
நான் மற்றவர் காலில் விழும் போது எனக்கும் அசிங்கம் இல்லை
என் காலில் மற்றவரை விழ
வைப்பதே அசிங்கம்