gowthami - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : gowthami |
இடம் | : tenkasi |
பிறந்த தேதி | : 10-Aug-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 793 |
புள்ளி | : 333 |
நான் ஒரு டாக்டர்
கவிதை
ஆர்வம்
நிறைய
உண்டு
குரலை நெரிப்பதே
குலதொழிலாக்கி கொண்டிருக்கும்
அரசாங்கத் தலைமைக்கு
ஒரு
குரலற்றவன்
அவன் தாகத்தை
ஒரு மொழியில் ஒலிக்க துடித்த
சமயத்தில் தான்
ஜனநாயக தேவியின்
கழுத்து நரம்பு
உடைப்படும் சத்தம் கேட்டது.
நீதி தேவதையின்
கருப்பபை உடையத் துவங்கியது.
அப்போதெல்லாம்
மக்கள் நாம்
உறக்கத்திலிருந்தோம்..
தெரியுமா ?
அல்லது
மயக்கத்திலிருந்தோம்
புரியுமா ?
பாரதிக்கா....
---------------------------
'நல்லா பாட்டு பாடுவியேக்கா'
உதட்டை சுழித்தாள்...
'ஸ்டேட் பஸ்ட்தானக்கா 12த்ல'
தலையை மட்டும் ஆட்டினாள்...
'பாஸ்கட் பால் செமையா விளாடுவீல்ல'
கண்களை அழுந்த மூடித் திறந்தாள்...
'ஆமா லவ் பண்ணீல்லக்கா என்னாச்சு'
கண்களைத் தவிர்த்தாள்....
'அகழ்வாராய்ச்சி படிக்கதான ஆசைப் பட்ட'
சரிந்து சோபாவில் அமர்ந்தவள்
சட்டென என் மடியில்
தலை சாய்த்து படுத்து விட்டாள்...
அறையெங்கும் நீண்ட
மௌனம்.....
இத்தனை வருடங்களுக்குப் பின்
இச்சந்திப்பும் உரையாடலும்
நடந்தேயிருக்க கூடாதோ
என்று சங்கடப்பட்ட கணத்தில்
என் தொடை நனைக்கத்
துவங்கியிருந்தது
பக்கத்து வீட்டில் தீ!
பார்வையாளன் டி-ஷர்ட்டில்
சே-குவேரா..!
--
கற்பு பொதுவாகியிருந்தால்
தேவையிருந்திருக்காது
கண்ணகி சிலை.!
--
துகிலுரித்தேன்.
நிர்வாணமானது
சாளரம்.
--
சாதீயம்
செய்கிறது பொதுவுடைமை(க்)
கொலைகள் !
--
தீ சுட்டது.
உயரோசையில் தாய்
தோலிசைக்கருவி.!
-
தலைக்கணம்
பாரம் தாங்குகிறது
தலையணை..!
--
அய்யகோ! நிற்காதோ?
இரயில் தண்டவாளத்தில் ஒடுகிறது
தலித்துகளின் செங்குருதி..!
--
அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!
--
விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?
--
இப்போதே அழைக
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது -2015
விருதாளர்கள்
தோழமைகள் :
சியாமளா ராஜசேகரன்
நிஷா மன்சூர்
சொ.சாந்தி
வீ .திலகவதி
மு .ரா
வளர்மதி
அமுதா அம்மு
பனிமலர்
முதல்பூ
கே .இனியவன்
ஜெயாராஜரத்தினம்
மகிழினி
எ கே கார்த்திகா
தருமன்
நிலாகண்ணன்
முகமது சர்பான்
கயல்விழி
குமார் பாலகிருஷ்ணன்
அன்புடன் ஸ்ரீ
நுஸ்கி மு எ மு
சரஸ்வதி பாஸ்கரன்
விருதாளர்களுக்கு வாழ்த்துகள்
பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளுடனும்
அகன்
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது -2015
விருதாளர்கள்
தோழமைகள் :
சியாமளா ராஜசேகரன்
நிஷா மன்சூர்
சொ.சாந்தி
வீ .திலகவதி
மு .ரா
வளர்மதி
அமுதா அம்மு
பனிமலர்
முதல்பூ
கே .இனியவன்
ஜெயாராஜரத்தினம்
மகிழினி
எ கே கார்த்திகா
தருமன்
நிலாகண்ணன்
முகமது சர்பான்
கயல்விழி
குமார் பாலகிருஷ்ணன்
அன்புடன் ஸ்ரீ
நுஸ்கி மு எ மு
சரஸ்வதி பாஸ்கரன்
விருதாளர்களுக்கு வாழ்த்துகள்
பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளுடனும்
அகன்
எழுத்துலகத்தில் கட்டாரி என்றறியப்படும் நமதுநண்பர் நல்லை சரவணாவின் இனிய பிறந்தநாள் இன்று. மலேசியாவில் இப்போது வசித்துக்கொண்டிருக்கும் இந்த பட்டுக்கோட்டை சரவணாவின் மனம் முழுவதும் தன் கிராமத்துமண்ணின் மனம்தான். முதுகெலும்பி, உழவு நாடன் என்கிற வட்டார வழக்குத் தொடர்களின்எழுத்து நாயகன் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நடவண்டி ஒரு ஏவுகணையின் வேகத்தில்நமது நெஞ்சை தொட்டுவிட்டதை நாம் அறிவோம்.
மூன்று முறையல்ல முதல்முறை
மறுதலித்தாலே போதும் நான் மரணிக்க.
அற்புத விளக்காக காத்திருக்கிறது
நீ தொட வேண்டிய என் வீட்டு விளக்கு.
நீ கொன்று விட்டு போன பின்னும்
நான் இருக்கிறேன்..!இது உன் உயிர்.
"என்ன வேணாலும் நினைச்சுக்கோ...
உன்ன இப்போ பிடிக்கல"
என்று சொல்லி நீ போனபோதுதான்
நிலவில் காற்றில்லை என்பது
ஞாபகம் வந்தது சம்பந்தமேயில்லாமல்....
நீ அலுவலகம் சென்றபிறகு
வந்து விட்ட பின்மதிய மழையில்
கொடியில் காயும் உன் ஆடைகளோடு
நானும் நனைகிறேன்...
எத்தனை முறைதான் கொல்வாய்?
ஒரு முறையாவது கொள் ளேன்...
நான் அன்புக்கு கை நீட்டுகிறேன்
மசூதியில் ஆலயத்தில்
கோவிலில் அப்புறம் உன்னிட
*** இயற்கை இணைத்தது
சாதியும், மதமும் கடந்த
மனிதர்களாக ....ஆனால்
அனைத்தும் இழந்தவர்களாக....
***சாதியும்,மதமும் சாக்கடை என
பேசி திரிந்த என் நா - இன்று
அடங்கியே கிடக்கிறது....
*** மனிதமே பெரிதென
இன்றும் மரிக்காத - நல்
மனித வெள்ளம் கண்டு
ஆனந்தம் அடைகிறேன்!
***' சமுதாய மருத்துவன் ' நான்
என சொல்லி திரிந்த நான்
எதை செய்தேன் ...
சில கண்ணீர் துளிகள் தவிர
வெட்கி குனிகிறேன்!
***உங்களுக்கும் இது இடைவேளை
எனக்கும் இது இடைவேளை
மீண்டு வரும் போது அனைத்தையும் விட்டு விடுங்கள்...
நானும் விட்டு விடுகிறேன் ...
*** இல்லை,இல்லை எனும்
பகுத்தறிவின் குரல்வளை நெறிக்க
வரச் சொல்லுங்கள் உங்கள்
கடவுளர்களை.................
***கருத்தை,கருத்தால் எதிர்கொள்ளும்
வீரமற்ற கடவுளின் தூதுவர்களே!
அறிவால் வெல்லும் திறனற்ற கோழைகளே!
நிறுத்திக் கொள்ளுங்கள் உங்கள் பாசிசத்தை !
***அறிவிற்கு எதிரான சவாலில் உங்கள்
ஆண்டவனே தோற்றுப் போவான் என்ற பயமா?
கிளர்ந்தெழும் கல்புர்கிகள் ஆயிரம் பேர் வரலாம்
இந்துத்துவாவின் வேரை அறுக்கலாம் _ இனி
ஆயத்தமாய் இருங்கள் உங்கள் வானரப் படையுடன்!
மிஷன் இம்பாசிபிள் 5:
1.உலகையே காக்கும் அமெரிக்க அண்ணாச்சியின் அதிரடியும்,சாகசமும்....
2.IMF இன் முக்கிய உளவாளி,அறிவாளி டாம் க்ருஸ்[ஈதன் ஹன்ட் ] சிண்டிகேட் எனும் தீவிரவாத அமைப்பை எப்படி முடக்குகிறார் என்பதே கதை .......
என் கேள்வி என்னவென்றால்,IMF எனும் அமைப்பு அமெரிக்காவில் உள்ளது போன்று 'சிண்டிகேட் 'டும் அமெரிக்க தீவிரவாத அமைப்பு என காட்சி படுத்தி இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்..........
இந்த தீவிரவாத அமைப்பு மற்ற நாடுகளில் உள்ளது போன்று காட்டப் பட்டத்தின் நோக்கம் என்னவாக இருக்க மு (...)