அநீதி - சந்தோஷ்
குரலை நெரிப்பதே
குலதொழிலாக்கி கொண்டிருக்கும்
அரசாங்கத் தலைமைக்கு
ஒரு
குரலற்றவன்
அவன் தாகத்தை
ஒரு மொழியில் ஒலிக்க துடித்த
சமயத்தில் தான்
ஜனநாயக தேவியின்
கழுத்து நரம்பு
உடைப்படும் சத்தம் கேட்டது.
நீதி தேவதையின்
கருப்பபை உடையத் துவங்கியது.
அப்போதெல்லாம்
மக்கள் நாம்
உறக்கத்திலிருந்தோம்..
தெரியுமா ?
அல்லது
மயக்கத்திலிருந்தோம்
புரியுமா ?