மனித வடிவ விஷப்பாம்புகளுக்கு

கடவுள் நம்பிக்கை உண்டு என்றவரிடம் கடவுள் உண்மையென்பதில் சந்தேகமாக ஆளுக்கொரு கோயில்,
கோயிலுக்கொரு கடவுள்,
கடவுளுக்கொரு வடிவம்...
விசித்திரமான மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான தொடர்பு அறுந்துவிட்டது மனிதனின் சுயநல நடத்தையால்...

கல்லான கடவுள் அநாதையாய் நிற்கின்றான்...
கடவுளுக்கென்று ஊர்ப்பணம் திரட்டி இந்த மனிதர்களே தின்று தீர்க்கிறார்கள்...
வேடிக்கையே வாடிக்கையாக பழகிவிட்டக் கடவுளுக்கு மறதி ஏற்பட்டிருக்குமோ?
பருவ மழை மாறி பெய்கிறது.
கால மாற்றமாய் இயற்கையின் மாற்றம்..
இயற்கையை அழித்து செயற்கையின் தாண்டவம்..

கடவுளிடம் எப்போது பார்த்தாலும் எனக்கு அது வேண்டும்,
இது வேண்டுமென்று பிரார்த்தனை செய்யும் கூட்டங்கள்...
என்றாவது, " கடவுளே! நல்ல இருக்கிறீர்களா? உணவு அருந்துனீர்களா? ", என்று கேட்டதுண்டா நீங்கள்?

அன்பற்ற சுயநல பதர்களாய், ஆடம்பரத்தில் சுற்றித் திரியும்,
விஷப்பாம்பு கூட்டங்களே,
நான் கடவுளிடம் எனக்கென்று எதையும் வேண்டுவதில்லை..
ஒரு தாய், தந்தைக்கு தன் மகனுக்கு என்ன தேவை என்பது தெரிந்திருக்கும்.
தாய், தந்தைக்கும் தாய், தந்தையான கடவுளுக்குத் தெரியாதா, எனக்கு எது தேவை என்று??

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Sep-17, 8:09 am)
பார்வை : 596

மேலே