கிளர்ந்தெழும் கல்புர்கிகள்

*** இல்லை,இல்லை எனும்
பகுத்தறிவின் குரல்வளை நெறிக்க
வரச் சொல்லுங்கள் உங்கள்
கடவுளர்களை.................

***கருத்தை,கருத்தால் எதிர்கொள்ளும்
வீரமற்ற கடவுளின் தூதுவர்களே!
அறிவால் வெல்லும் திறனற்ற கோழைகளே!
நிறுத்திக் கொள்ளுங்கள் உங்கள் பாசிசத்தை !

***அறிவிற்கு எதிரான சவாலில் உங்கள்
ஆண்டவனே தோற்றுப் போவான் என்ற பயமா?
கிளர்ந்தெழும் கல்புர்கிகள் ஆயிரம் பேர் வரலாம்
இந்துத்துவாவின் வேரை அறுக்கலாம் _ இனி
ஆயத்தமாய் இருங்கள் உங்கள் வானரப் படையுடன்!

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (7-Sep-15, 11:46 am)
பார்வை : 90

மேலே