ஊஞ்சல்ப் பார்வை
" ஊஞ்சல்ப் பார்வை "
பாதை தோறும் கைகாட்டி - நல்
பயணம் போக வழிகாட்டி
காலம் என்னும் கைகாட்டி - வாழ்வில்
கடந்தே செல்லுமுன் நிலைகாட்டி
சாகும் வரையில் வாழ்வினிலே
போகும் தூரம் தொலைவாகும்
சேரும் இடத்தில் சேரும் வரை
யார் தான் வருவார் துணையாக
மனமே மனமே மயங்காதே
தினமும் எண்ணிக் கலங்காதே - எக்
கணமும் உழைக்காது உறங்காதே - வெறும்
கனவாய் வாழ்வை நினைக்காதே