எதை செய்தேன் நான்
*** இயற்கை இணைத்தது
சாதியும், மதமும் கடந்த
மனிதர்களாக ....ஆனால்
அனைத்தும் இழந்தவர்களாக....
***சாதியும்,மதமும் சாக்கடை என
பேசி திரிந்த என் நா - இன்று
அடங்கியே கிடக்கிறது....
*** மனிதமே பெரிதென
இன்றும் மரிக்காத - நல்
மனித வெள்ளம் கண்டு
ஆனந்தம் அடைகிறேன்!
***' சமுதாய மருத்துவன் ' நான்
என சொல்லி திரிந்த நான்
எதை செய்தேன் ...
சில கண்ணீர் துளிகள் தவிர
வெட்கி குனிகிறேன்!
***உங்களுக்கும் இது இடைவேளை
எனக்கும் இது இடைவேளை
மீண்டு வரும் போது அனைத்தையும் விட்டு விடுங்கள்...
நானும் விட்டு விடுகிறேன் ...
இயற்கை அனைத்திலும் பெரிது!!!