பறந்து செல்வோம்
மறைந்த மேகம், தெளிந்த வானம்;
பறந்து போவோம் இணைந்து நாமும்.
பறவைகள் போலவே சிறகுகள் நீளுதே;
கவலைகள் தாண்டியே காலங்கள் ஓடுதே!
பறந்து செல்வோம்! வா பறந்து செல்வோம்!!
காண்கின்ற காட்சிகள் மாறிடும் வேளையில்,
மாற்றங்கள் கூடிடும், வாட்டங்கள் ஓடிடும்.
வண்ணங்கள் காட்டிடும் வானவில் போலவே,
வாழ்ந்து தான் காட்டுவோம் பூமியின் மீதிலே!
பறந்து செல்வோம்! வா பறந்து செல்வோம்!!