என் மொழி

⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️

*என் மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️

கீழே விழுந்தவனுக்கு
கை கொடுத்து
உதவி செய்யாவிட்டாலும் சிரிக்காமல் இரு
அதுவே
அவனுக்கு
நீ செய்யும்
மிகப்பெரிய உதவியாகும்....!

💦💦💦💦💦💦💦💦💦💦💦

கொடுத்து
வாழாமல் போனாலும்
எடுத்து வாழ்ந்து விடாதே....
கொடுக்காமல் போனால்
புண்ணியம்தான் கிடைக்காது எடுத்து வாழ்ந்தால்
பாவத்தை தவிர
எதுவும் கிடைக்காது....!

💧💧💧💧💧💧💧💧💧💧💧

சொந்தம் என்பது
கல்யாணத்திற்கும்
காரியத்திற்கும் தான்....
கஷ்டத்திலும்
நஷ்டத்திலும் என்று
நினைத்தால்
மனதில்
காயம் இருக்காது
மணமாக இருக்கும்...!

❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️

அருகில்
இருக்கும் போது
நினைத்துக் கொண்டிருக்கும்
உறவுகளை விட...
தூரத்தில்
இருக்கும் போது
மறக்காமல் இருக்கும்
உறவுகளே சிறந்தது....!

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

நான்கு பேர்
நல்லா இருக்கட்டும் என்ற
எண்ணத்தில்
உதவி செய்
ஆனால்
அந்த நான்கு பேர்
நாளை
உனக்கு
உதவி செய்வார்கள் என்ற
எண்ணத்தில்
உதவி செய்து விடாதே
பிறகு
ஏமாற்றமே மிஞ்சும்....!!!


*கவிதை ரசிகன்*

⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️

எழுதியவர் : கவிதை ரசிகன் (10-Jan-25, 10:18 pm)
Tanglish : en mozhi
பார்வை : 3

மேலே