பாரதில் பாரதி

தென்னகம் பெற்றவோர் கார்குயிலே
தேகமு டுத்திய தீக்கனலே
== அன்னைப ராசக்தி பாலகனே
== ஆகம வேர்தொட்ட நூலகமே
எட்டயர் போற்றிய பாரதியே
ஏழிசை மீட்டிடும் பாவலரே
== குட்டிடக் குன்றாமல் நிமிர்ந்தாள
== கோழையைத் தீட்டிட்ட ரத்தினமே
தன்னல மற்றது உன்சுவாசம்
தாயகம் பேணிட விட்டுவிட்டாய்
== இன்னமும் இப்பூமி மூச்சுவிட
== யாப்புநற் பாட்டாக மொட்டுவிட்டாய்
... மீ.மணிகண்டன்