காதல் செய்

காதல் செய்ய
பணம் தேவையில்லை...!

காதல் கொள்ள
அழகு தேவையில்லை...!

காதல் ஏற்க
குணம் தேவையில்லை...!

காதல் கவிதை எழுத
கல்வி தேவையில்லை...!

கண்ணீர் சிந்துகையில்
அதனைத் துடைக்க
கைகுட்டை இருந்தால் போதும்...!

பிரிந்திடுவோம் - என
தெரிந்திருந்தும்....
மலரைச் சுமக்க
மறுப்பதில்லை செடி...!

பிரிவதற்காக
காதலிப்பதில்லை எவரும்...

இணை பிரியாமல்
இருப்பதற்காகத்தான்
விரும்புகிறார்கள் ஒவ்வொருவரும்...!

சூழ்நிலைக்கு கைதியாகி
உடைந்து போகிறார்கள்...!

பிரியும் பூவாக இல்லாமல்
சுமக்கும் செடியாக இருப்பதுதானே...
உண்மையான காதல்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (7-Aug-16, 1:05 am)
Tanglish : kaadhal sei
பார்வை : 247

மேலே