உறுதி

வார்த்தைகளின் வீரியம்
இதயச் செல்கள் அனைத்தையும்
அணுவணுவாய் வலி ருசிக்க
தோற்று நின்ற சுயமரியாதைக்கு
ஆறுதலாய் ஓர் இரவு
இரவோடு ஒரு கனா
கனாவோடு ஓர் தேடல்
தேடலோடு ஓர் பதில்
சேகரித்த தோல்விகள் பாதை படிக்கட்டுகளாய்
வலிகள் வைராக்கியமாய்
அனுபவம் திசைகாட்டியாய்
தன்னம்பிக்கையே துணையாய்
தொடங்கியது பயணம்
வெற்றியின் எல்லைக் காண ........................

எழுதியவர் : laashya (7-Aug-16, 12:58 am)
சேர்த்தது : கவியாழினி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : uruthi
பார்வை : 136

மேலே