அழகின் வர்ணனை

எனது அன்பின் சுவாசகாற்றுக்கு
கிளைகளை போன்று அசைந்தும்

எனது கோப புயலுக்கு
வேர்களை போன்று அசையாமலும்

என் வாழ்வில் என்றும்
எனக்கு நிழலாய் இருப்பவளே


சேலையில் பார்த்தால் எனது
"அன்னையாகவும்"

சுடிதாரில் பார்த்தால் எனது
"தோழியாகவும்"


பாவாடை தாவணியில் பார்த்தால் எனது
"கனவு கன்னியாகவும்"

ஒளிர்பவளே.......


இன்றும் மயக்கத்தில்
இருக்கிறேனடி
உனது அன்பு கலந்த போதையில்....


முத்தத்திற்கு ஏங்க வைக்கும்
"கண்ணங்கள்"
கை பிடிக்க தூண்டி விடும்
"சுண்டு விரல்கள்"
நடையில் சுதி பாடும்
"இடைகள்"
கார்மோன்களை கட்சி மாற வாய்க்கும்
"தேகங்கள்"

மொத்தத்தில்
அணு அணுவாக எனை வைதைத்தாயடி
""உன் அழகால்""........

எழுதியவர் : jothi (3-Aug-16, 3:19 pm)
சேர்த்தது : joதி
Tanglish : azhakin varnanai
பார்வை : 145

மேலே