சுவாஸ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுவாஸ் |
இடம் | : nagercoil |
பிறந்த தேதி | : 27-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 14 |
புதுசட்டை போர்த்திய பாம்பெல்லாம்
பசுக்களென்று பொருள் பெறுமா??
தலைப்பை மாற்றிய கிறுக்கலெல்லாம்
கவிதைகளென்று இனித்திடுமா ??
நித்தம் நூறு களம்கண்டு
நிலைப்பதெல்லாம் மாட்சிமையா ??
கண்ணியம் காக்க தவறியப்பின்
புண்ணியம் பார்ப்பது காந்தியமா ??
அந்நியன் செய்த சுரண்டலெல்லாம்
அடுத்துள்ளவன் செய்தால் சுதந்திரமா ??
எது தீவிரவாதம் ??
அவன் கொள்கை இவனுக்கும்
இவன் கொள்கை அவனுக்கும் தீவிரவாதம்
முதலாளித்துவம் பொதுவுடைமைக்கும்
பொதுவுடைமை முதலாளித்துவத்துக்கும் தீவிரவாதம்
இவன் மதம் அவனுக்கும்
அவன் மதம் இவனுக்கும் தீவிரவாதம்
இவன் கண்ணில் புரட்சியென பட்டதெல்லாம்
அவன் சொல்லில் தீவிரவாதம்
பலரால் அங்கீகரிக்கப்பட்டவன் தலைவன்
சிலரால் அங்கீகரிக்கப்பட்டவன் தீவிரவாதி
நியாயம் உண்மை என்பதை கடந்து
வெகுஜன கூற்று தர்மம் என்கிற உலகில்
யார் தீவிரவாதி?
தன் கொள்கைக்காய்
சக மனிதனின் உயிர் குடிக்கும் எவனும் தீவிரவாதியே
எதுவும் தீவிரவாதமே....!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உன் பெயரை எழுதுகையில்
என் பேனாவும் சிந்திக்கொள்கிறது
சில முத்தங்களை .......................................
கிறித்தவனுக்காய் தேவாலயம்
முஸ்லிம்களுக்காய் மசூதி
இந்துக்களுக்காய் கோவில் என்றில்லாமல்
மனிதனுக்காய் கொட்டகை ஒன்று எழுப்புங்கள்
கவிந்து விழும் கடவுளின் மொத்த கருணையும் ..
சிரித்துக்கொண்டே இருக்கின்றன
மனித இறப்புக்காக
சிந்தப்பட்ட பூக்களெல்லாம் ..