சது - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சது
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  18-Jun-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Aug-2016
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  4

என்னைப் பற்றி...

சது,மாணவி
இந்த எழுத்து தளத்தினூடாக எனது தமிழ் ஆற்றலை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றேன்.

என் படைப்புகள்
சது செய்திகள்
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Feb-2018 7:07 am

.....கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 47

மனதை அமைதிப்படுத்தி அவள் எங்கே சென்றிருப்பாள் என்று கண்ணை மூடி யோசித்தவனின் மனக்கண்ணில் அந்த இடம் மட்டுமேதான் வந்து நின்றது...அவள் இப்போதிருக்கும் மனநிலையில் நிச்சயமாக அங்குதான் சென்றிருப்பாள் என்று முடிவு செய்து கொண்டவன்,அவனிற்கு அவளை அடையாளம் காட்டிய அந்தக் கடற்கரையை நோக்கி காரைச் செலுத்தினான்....

மின்னல் வேகத்தில் கடற்கரையை வந்தடைந்தவன்...காரைப் பார்க்கிங்கில் விட்டு விட்டு அவளைத் தேடிச் சென்றான்...அவன் தேடிய அனைத்து வழிகளிலும் அவனிற்கு ஏமாற்றத்தை பரிசளித்தவள்...இம்முறை அவனை ஏமாற்றாமல் அவன் எதிர்பார்த்தது போலவே அங்குதான் இருந்தாள்..

அவளைக்

மேலும்

இனிதான நன்றிகள் ஐயா! 04-Apr-2018 4:26 pm
காவியமா ! காதல் இலக்கியமா ! சென்ற வார சிறந்த கதை :--எழுத்து தளம் தேர்ந்தேடுத்தற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் பரிசுகள் தமிழ் அன்னை ஆசிகள் 20-Feb-2018 7:48 am
மார்ச் ஒன்றில் பதிவு செய்கிறேன் 17-Feb-2018 10:44 pm
தாராளமாக எழுதுங்கள் ஸர்பான்...! 17-Feb-2018 10:42 pm
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Feb-2018 11:12 pm

....அவளின்றி நானில்லை....

"...நீ நானாக
நான் நீயாக
நாமிருவரும் இருதயம்
வரைந்து கொண்ட
காதலின் புது
மொழிகளானோம்..."

என் மனம் என்றுமில்லாதவாறு இன்று கொஞ்சம் அதிகமாகவே படபடத்துக் கொண்டிருந்தது...எப்பொழுதுமே அவள்தான் எனக்காக இன்ப அதிர்ச்சிகளைப் பரிசளித்து என்னைக் காதல் கடலில் தத்தளிக்கச் செய்வாள்...

ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக நான் அவளிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறேன்...முதற் தடவை என்பதால் நான் நினைத்தபடியே அனைத்தும் சுமூகமாக நடந்துவிட வேண்டுமென்று மனம் வேண்டிக் கொண்டது...

ஆம்,நாளை எங்களின் திருமணநாள்...அதுவும் எங்களிருவர் வாழ்க்கையிலும் மிகவும் விசேசமான திருமணநாள்...அதை

மேலும்

மனமார்ந்த நன்றிகள் நண்பரே! 12-Mar-2018 8:09 pm
சகி, இப்பொழுது தான் நேரம் கிடைத்தது... எனக்கு. நல்ல கதையை தாமதமாக படித்தற்காக வருந்துகிறேன்...... கதை நல்லாருக்கு. உங்களின் அடுத்த தொடர்கதைக்காக காத்திருக்கிறேன். 08-Mar-2018 6:37 pm
இனிமையான நன்றிகள் தோழி! 03-Mar-2018 11:05 am
இனிமையான நன்றிகள் ஸர்பான்! 03-Mar-2018 11:05 am
உதயசகி அளித்த படைப்பை (public) கங்கைமணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Mar-2018 8:04 pm

....மலரும் உன் நினைவுகள்....

நிலவின் விழிகளில்
நான் தினம் படித்த
உந்தன் கையொப்பங்கள்தான்
என் கனவுகளில்
நான் தினம் வரையும்
உந்தன் ஓவியங்கள்...

ஆதவனின் அகராதிக்குள்
நான் தேடி அலைந்த
உந்தன் வார்த்தைகள்தான்
என் இருதயத்துக்குள்
நான் கிறுக்கிக் கொண்ட
உனக்கான கவிதைகள்...

வானத்தின் பக்கங்களில்
நான் பூசிக் கொண்ட
உந்தன் வண்ணங்கள்தான்
என் உதடுகளில்
நான் தீட்டிக் கொண்ட
வெட்கத்தின் சுவடுகள்...

வீண்மீன்களின் அரிச்சுவடியில்
நான் எழுதிக் கொண்ட
உந்தன் தீண்டல்கள்தான்
என் கைரேகைகளில்
நான் பதித்துக் கொண்ட
மருதாணியின் முத்தங்கள்...

தென்றலின் மௌனத்தில்
நான் சேர்த்துக் கொண்ட
உந்த

மேலும்

மகிழ்வான நன்றிகள் நண்பரே! 04-Apr-2018 4:30 pm
இனிமையான நன்றிகள்! 04-Apr-2018 4:29 pm
இனிதான நன்றிகள்! 04-Apr-2018 4:29 pm
ஒரு பெண்மையின் அழகான காதல் சிறப்பாக வெளிப்பட்டது.அருமை வாழ்த்துக்கள் 31-Mar-2018 3:50 pm
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Jan-2018 7:47 pm

.....நெஞ்சோடு கலந்திடு.....

அத்தியாயம் : 13
(இறுதி அத்தியாயம்)

அன்று அவன் தந்த முதல் முத்தத்தின் ஸ்பரிசத்தில் இன்றும் என் மேனி சிலிர்த்துக் கொண்டது...அந்த அணைப்பின் பின்பு அவன் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை...என் அழுகை தீரும் வரை அவனது அணைப்பிலேயே என்னை வைத்திருந்தவன்...அதே அணைப்போடே என்னை வீடு வரை வந்து விட்டுச் சென்றான்...

அன்றைய நாள் என் வாழ்க்கையிலேயே அதிக சந்தோசங்களைக் கொட்டிக் கொடுத்த நாள் என்றுதான் சொல்ல வேண்டும்...அது போன்றதொரு நாள் இனியும் என் வாழ்க்கையில் வருமா என்று தெரியவில்லை...அப்படி ஒரு நாள் வந்தாலுமே அந்நாளைப் போல் எந்நாளும் அமைந்துவிடாதென்பது நிச்சயமே...

மறுநாள் அவ

மேலும்

மரணத்தை தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கும் காதலுக்காய் இக்கதை...இனிதான நன்றிகள்! 08-Feb-2018 7:22 pm
உடல் நடுங்குகின்றது ... ஏன் இந்த சோகமான முடிவு மனம் கலங்குகிறது ஆசைகளையும் அன்பையும் மனதுக்குள் மட்டும் வைத்து இருந்தால் .... வலிகள் இரு மனதிற்கும் .... 02-Feb-2018 3:33 pm
எப்போதும் துள்ளலோடு வரும் தங்களின் கருத்தில்,இன்று சோகத்தின் சாயல் வீசினாலும்...இக் கதை உங்களைப் பாதித்திருக்கிறது என்ற வகையில் மனம் மகிழ்ச்சியடைகின்றது.. தொடர்ச்சியாக இக் கதையோடு பயணித்து,தாங்கள் வழங்கிய ஊக்கமான கருத்துக்களிற்கு என் மனதினிய நன்றிகள் நண்பரே! 30-Jan-2018 9:47 pm
உங்களக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.... அருமையான படைப்பு 30-Jan-2018 9:43 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2016 7:43 am

பூக்கள் பூத்த போது
இலைகள் உதிர்ந்தது
வேரின்றியும் மரம்
யுகமாய் வளர்ந்தது
--அனாதை இல்லம்--

உன் எதிரியை
கொல்லும் ஆயுதம்
இதழின் புன்னகை
உன் துரோகியை
கொல்லும் ஆயுதம்
வெற்றியின் படிகள்

மனிதன் வென்ற
முதல் நோபல் பரிசு
கண்ணீர்த் துளிகள்

ஒவ்வொரு நகர்விலும்
ராஜ்ஜியம்
காக்கப்படுகிறது
சதுரங்க வேட்டை

வானம் அழுத போது
கண்கள் சிரித்தது
ஏழை வீட்டில் வெள்ளம்

ஒரு நாள் வாழ்ந்தாலும்
சாகும் வரை போராடும்
மின்மினிப் பூச்சிகள்

சவாரிகள் ஓடாவிட்டால்
எங்கள் வாழ்க்கையும் நகராது
இப்படிக்கு உழைப்பாளி

மனிதனின் வாழ்க்கையும்
தினந்தினம் சுவாசத்துக்காய்
பிச்சை எடுக்கி

மேலும்

மிகவும் ஆனந்தம் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Sep-2016 10:32 am
"மனிதன் வென்ற முதல் நோபல் பரிசு கண்ணீர் துளிகள்....."உண்மையின் சாரல் இது, என் மனதை கவர்ந்த கவி இது அருமை நண்பா..! 20-Sep-2016 12:09 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Sep-2016 10:17 pm
அருமையான கவிதை. வாழ்த்துக்கள். 14-Sep-2016 9:46 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2016 7:03 am

மழலை மொழி

அகராதியிலும்
அறிந்திடமுடியா
அழகு மொழி.....

மேலும்

கருத்தளித்தமைக்கு என்றென்றும் என் இனிய நன்றிகள் தோழி.... 21-Aug-2016 7:01 am
அழகு கவி... 21-Aug-2016 12:25 am
கருத்தளித்தமைக்கு என் இனிய நன்றிகள் நண்பா..... 14-Aug-2016 6:57 am
நான் மனம் மகிழ்ந்த மொழி....... 13-Aug-2016 10:16 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2016 10:59 am

வெளிநாட்டு மோகமும் மாறுபடும் பெண்களும்

பணத்தையும்
பகட்டையும்
கண்டு
பல்லிளித்து
சென்றால்
ஒருத்தி.......

படித்தது
தாய்நாட்டில்
பணி புரிவது
வெளிநாட்டில்
என்று
சொகுசு வாழ்க்கை
நாடி சென்றால்
ஒருத்தி......

மன்மதனின்
அழகில் மயங்கி
மாசற்ற காதல்
கொண்டு
கரம்பிடித்து
சென்றால்
ஒருத்தி.......

வழுக்கை தலை
என்றாலும்
நரைமுடி
கண்டாலும்
குடும்ப சுமை
போக்க
கண்ணீருடன்
விடை பெற்று
சென்றால்
ஒருத்தி........

பெற்றோர்
கைகாட்டிய
மணாளனுக்கு
மறு பேச்சின்றியே
கழுத்தை நீட்டி
சென்றால்
ஒருத்தி......

அகதியாய்
சென்றவள்
அந் நாட்டு
குடியுரிமை
பெற்றிடவே
அந் நா

மேலும்

கருத்தளித்தமைக்கு என் இனிய நன்றிகள் தோழி... 21-Aug-2016 6:59 am
உண்மையான வரிகள்... 21-Aug-2016 12:22 am
உண்மைதான் தோழா....,உங்கள் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...... 18-Aug-2016 11:21 am
இன்னொன்று தோழி; வெளிநாட்டில் உழைக்கும் பணம் நாட்டிற்குள் வந்தால் அந்நிய செலாவணி நாட்டிற்கு கிடைக்கிறது. இதுவும் பெரும் சேவை தான். அதனால் தான் வெளிநாட்டில் உழைத்த பணம் நாட்டிற்குள் வந்தால் அதற்கு வரி அறவீடு இல்லை. 18-Aug-2016 7:21 am
உதயசகி அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2016 9:57 am

மழை

கருமுகில்
சிந்திடும்
விழிநீர்....!!

மேலும்

இனிமேல் திருத்திக் கொள்ளகிறேன் நண்பா...கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன் என் இனிய நன்றிகள் நண்பா.... 26-Aug-2016 8:49 am
நன்று.. பட் ஹைக்கூக்கு தலைப்பு வைக்காதீங்க...வெறும் ஹைக்கூ னு மட்டும் போடுங்க.... நாம ஹைக்கூவோட கடைசி வரிய சொல்லிட்டா அதுல இருக்க சுவாரசியம் போய்டும்.... 26-Aug-2016 12:38 am
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன் என் இனிய நன்றிகள் தோழமையே..... 22-Aug-2016 8:10 pm
சிறந்த கவி......! 22-Aug-2016 3:08 pm
சது - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2016 6:32 pm

பணம் பணம் என்று தான்
படித்தவனும் அலையுறான்
பாடம் அதை படித்துமே
பண்பு இன்றித் திரியுறான்
பணம் அதனைக் கண்டதும்
பெற்றவரையும் மறக்கிறான்
எங்கு சென்று முடியுமோ?-இந்த
மானிடரின் வாழ்க்கை...

மேலும்

அழகான கட்டமைவு.அருமையான கவி வாழ்த்துக்கள் 14-Sep-2016 7:13 pm
கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே..... 20-Aug-2016 9:11 pm
பணம் சம்பாதிக்கும் கருவியாய் கல்வியும் ஆகிவிட்டது... வாழ்த்துக்கள் .... 20-Aug-2016 7:32 am
உண்மைதான்..இறைவன் எழுதிய உலகின் பாதைகள் நிச்சயம் ஓரிடத்தில் விரைவாக முடிந்தால் பாவங்கள் குறையலாம் 20-Aug-2016 7:21 am
சது - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2016 10:27 pm

தன் தவத்தால் வந்த உடலுக்கு
உயிர் கொடுக்கும் தெய்வம்

மேலும்

அருமையான வரிகள் 14-Sep-2016 7:12 pm
மிகவும் நன்றி தோழியே.. 20-Aug-2016 9:20 pm
உண்மைதான்....தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 19-Aug-2016 8:46 pm
கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி தோழரே... 19-Aug-2016 3:06 pm
சது - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2016 8:48 pm

ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து
ஈன்றெடுத்த தாயவள் நீ அம்மா- உன்
உதிரத்தை பாலாக எடுத்து- எனக்கு
உணவாக கொடுத்தவள் நீ அம்மா
காலங்கள் பல கடந்து சென்றாலும்-எனைக்
காப்பாற்றி வருபவள் நீ அம்மா
எத்தனை ஜென்மங்கள் வந்தாலும்
எனக்கு தாயாக நீ வேண்டும் என் அம்மா.....

மேலும்

அருமை தோழி.....அழகான வரிகள்...வாழ்த்துக்கள்..... 19-Aug-2016 8:43 pm
கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.... 19-Aug-2016 3:10 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2016 6:34 am
தாலாட்டும் தாயின் சுவாசம் பசியாறும் பிள்ளையின் உணவு 19-Aug-2016 6:33 am
சது - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2016 4:24 pm

பள்ளி எனும் பூவினுள்ளே வண்ணங்களாய் இணைந்தோம்
நட்பு எனும் ஆலயத்துள் கோடி தெய்வம் கண்டோம்
சின்ன சின்ன குறும்புகளும் சண்டைகளும் பிடித்தோம்
படிப்பு அதை நாமும் விருப்புடனே கற்றோம்

மேசை மீது கவி எழுதி கவிஞனையும் வென்றோம்
குழுவாக தண்டனையும் மகிழ்வுடனே பெற்றோம்
ஓயாமல் கதை சொல்லி நண்பரையும் கொன்றோம்
பள்ளி அதன் நினைவுகளை நினைத்தாலே இனிக்கும்.

மேலும்

கவி அருமை 24-Aug-2016 2:04 pm
பள்ளியின் நினைவுகள் என்று நினைத்தாலும் தித்திக்கும் பருவங்கள்....அழகு....இன்னும் எழுதுங்கள் தோழி...வாழ்த்துக்கள்..... 19-Aug-2016 8:38 pm
ஆம் தோழரே....கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பா.. 19-Aug-2016 3:13 pm
உண்மைதான்..ஆனால் காலம் குறுகிய நகர்வில் தடை போட்டு விடுகிறது 19-Aug-2016 6:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ரூபின் தியா

ரூபின் தியா

மார்த்தாண்டம்
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
user photo

சுவாஸ்

nagercoil
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
தாஜூ

தாஜூ

தாய் தமிழ்நாடு(கன்னியாகு
மேலே