நீ அம்மா
ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து
ஈன்றெடுத்த தாயவள் நீ அம்மா- உன்
உதிரத்தை பாலாக எடுத்து- எனக்கு
உணவாக கொடுத்தவள் நீ அம்மா
காலங்கள் பல கடந்து சென்றாலும்-எனைக்
காப்பாற்றி வருபவள் நீ அம்மா
எத்தனை ஜென்மங்கள் வந்தாலும்
எனக்கு தாயாக நீ வேண்டும் என் அம்மா.....