தாய் அன்பு

தாயே! ! அன்னை என்ற சொல்லுக்கு நான் கண்ட அர்த்தங்கள் தான் இவை,
தான் பட்ட துன்பம்
தன் சேய் படக்கூடாது
என்று கண்ணின் மணி போல் காப்பவள் நீயே!


நாட்கள் முழுவதும் கடலலை போன்று ஓயாதவள் நீயே! சுமைகளை கூட சுகங்களாக நினைத்து வியர்வை சிந்துபவள் நீதான் தாயே! தனிமையில் தவிக்கிறேன் நான் - உன் கனவுகளை புதைத்து விட்டேன் மணலுக்குள்!


இதுவரை நான் கண்டதில்லை உனக்கு ஈடான தெய்வங்களை! எனக்கு உயிர் கொடுத்து உருவம் கொடுத்து நான் உலகத்தை பார்க்க உன் உயிரை பிணையம் வைத்தாயே!


பசியால் அழுத எனக்கு உன் இரத்தத்தை பாலாக்கினாய்! அன்று என் அறிவு கதவைத் திறக்க உன் வியர்வையை நிலத்தில் சிந்தினாய்! இன்று என் இன்பத்திற்காக உன் கௌரவத்தை விட்டுக் கொடுத்து விட்டாயே!!!


இவை தான் அன்னை என்ற சொல்லின் அர்த்தங்களா? பதிலை கூறுங்கள் கண்ணீருடன் உங்கள் முன் நிற்கும் எனக்கு????????

எழுதியவர் : சி.பிருந்தா (18-Aug-16, 6:01 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : thaay anbu
பார்வை : 162

மேலே