ஆகட்டும்
ஆகட்டும் !
மருமகள் : மாமி ..இன்னிக்கி யாரொட சமையல்…..
மாமியார் : டியுட்டி லிஸ்ட்ட பாத்திட்டு நீயெ சொல்லு …
மருமகள் : மாமி …இன்னிக்கி செவ்வா கெழம ..நீங்க தா சமையல்
செய்யனும்….
மாமியார் : இன்னிக்கி நீயும் இல்ல மகனும் இல்ல அப்பரம் எதுக்கு
சமையல் பண்ணனும்…. வழக்கம் போல ரெண்டு
வேலைக்கும் எனக்கு ஹொட்டல்ல ஆர்டர் கொடுத்திடு ….
மருமகள் : உங்க மகங்கிட்ட சொல்லுங்க ….இன்னும் நா பஸ்ல எங்கம்மா
வீட்டுக்கு போயிகிட்டு இருக்கேன்னு …
மாமியார் : மகன் இப்ப தான் போன் பண்ணி சொன்னான் ..கால மணி
பத்துக்கெல்லாம் கிரிஜா அவுங்க அம்மா வீட்டுக்கு போய்
சேந்திடுவான்னு ! இப்போ மணி பன்னெண்டு ஆவுதே…
மகனுகிட்ட சொல்லவா …
மருமகள் : வேணா மாமி .. பஸ்ல இருந்தே ஆர்டர் பண்ணிடரன்….
மாமியார் : ஆகட்டும் மருமகளே !