நினைத்தாலே இனிக்கும்

பள்ளி எனும் பூவினுள்ளே வண்ணங்களாய் இணைந்தோம்
நட்பு எனும் ஆலயத்துள் கோடி தெய்வம் கண்டோம்
சின்ன சின்ன குறும்புகளும் சண்டைகளும் பிடித்தோம்
படிப்பு அதை நாமும் விருப்புடனே கற்றோம்

மேசை மீது கவி எழுதி கவிஞனையும் வென்றோம்
குழுவாக தண்டனையும் மகிழ்வுடனே பெற்றோம்
ஓயாமல் கதை சொல்லி நண்பரையும் கொன்றோம்
பள்ளி அதன் நினைவுகளை நினைத்தாலே இனிக்கும்.

எழுதியவர் : சது (18-Aug-16, 4:24 pm)
Tanglish : Ninaithaale inikkum
பார்வை : 633

மேலே