அழகிய விடுதி வாழ்க்கை

உயிரின் வேர்களில் உட்கார்ந்து நட்பின் சாசனம் வரையும் தருணம் இது.........!
தோழியே!! மறந்து விட்டாயா? எம் விடுதி வாழ்க்கையின் நினைவுத்தூறல்களை!
விடுதி வாழ்க்கை கசப்பானதாம் எனப் பலர்கூறியதை கேட்டுள்ளேன் நான் தினமும் !!! என் மூளைக்கு தேவைப்பட்டது சிறிது நேரம் நம் விடுதி வாழ்க்கையை நினைவு படுத்துவதற்கு!
மணிக்கூட்டின் முட்களை போன்று கல்வி,விளையாட்டு ஒழுக்கம், பண்பாடு அனைத்தையும் தந்தது நம் விடுதி அல்லவா?
கண்டிப்பு உள்ள இடங்களில் தான் வளருமாம் நற் பழக்கங்கள்!! துன்பத்திலும் நாம் இன்பம் கண்டது நம் விடுதியில் அல்லவா?
காலத்தின் தேவைகருதி பிரித்து விட்டோம் நாம் இன்று நினைவுகள் நிலையானவை இன்றும் என் நினைவுகளில் அந்த அழகிய விடுதி வாழ்க்கை!!!!!!!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
