வெளிநாட்டு மோகமும் மாறுபடும் பெண்களும்

வெளிநாட்டு மோகமும் மாறுபடும் பெண்களும்

பணத்தையும்
பகட்டையும்
கண்டு
பல்லிளித்து
சென்றால்
ஒருத்தி.......

படித்தது
தாய்நாட்டில்
பணி புரிவது
வெளிநாட்டில்
என்று
சொகுசு வாழ்க்கை
நாடி சென்றால்
ஒருத்தி......

மன்மதனின்
அழகில் மயங்கி
மாசற்ற காதல்
கொண்டு
கரம்பிடித்து
சென்றால்
ஒருத்தி.......

வழுக்கை தலை
என்றாலும்
நரைமுடி
கண்டாலும்
குடும்ப சுமை
போக்க
கண்ணீருடன்
விடை பெற்று
சென்றால்
ஒருத்தி........

பெற்றோர்
கைகாட்டிய
மணாளனுக்கு
மறு பேச்சின்றியே
கழுத்தை நீட்டி
சென்றால்
ஒருத்தி......

அகதியாய்
சென்றவள்
அந் நாட்டு
குடியுரிமை
பெற்றிடவே
அந் நாட்டு மகனை
மணம்முடித்து
அங்கேயே
குடியேறினாள்
ஒருத்தி......

வெளிநாட்டு
மோகம் கொண்டு
தன் நாடு தானும்
மறந்து
அயல் நாட்டிற்கு
அடிமையாகி
சென்றால்
ஒருத்தி......

பட்டம் பெற
சென்றவள்
அந் நாடே
தஞ்சமென
அங்கேயே
தங்கினால்
ஒருத்தி.....

தன் குடும்ப
வறுமை
போக்கிடவே
எந்த தொழில்
என்றும்
பாராமல்
சுமை தாங்கி
சென்றால்
ஒருத்தி.......

பணத்தின்
மேல் ஆசை
கொண்டு
புது தேசம்
தேடி சென்றால்
ஒருத்தி......

வெளிநாட்டு
மோகத்திற்கு
அடிபணியாது
ஆயிரம் துயர்
வந்தாலும்
தன் தாய்
நாட்டிலேயே
நிமிர்ந்து நின்று
சாதித்தாள்
மானஸ்தி.........!!


இதில் சிலது ஆண்களுக்கும் பொருந்தும்...
-சகி-

எழுதியவர் : அன்புடன் சகி (14-Aug-16, 10:59 am)
பார்வை : 187

மேலே