காதற்ற ஊசியும் வாராது
ஒருவனுள் இருந்து
விந்து வழிந்து
ஒருதிக்குள் சென்று
அணு பல கொன்று
கரு முட்டை அடைந்து
குருதி சதை சேர்த்து
கை கால் என உருவம் சேர்ந்து
கொடும் வலிக் கொடுத்து
அழுது கதறி புவி விழுந்து...,
மழலை என தவழ்ந்து
வாரம் பல ஓட
வார்த்தை சில உதிர்த்து
நடை பழகி
உடை ,நகை நாடி
துன்பம் தருவதில் மனதை லயித்து
நடப்பு சில சேர்ந்து
தெருவில் அலைந்து ....,
பருவம் எய்து
காதல் ரசம் பூத்து
திருமணம் கனிந்து
காம லீலையில்
பாவத்தைச் சுமந்து
வளமையும் மாறி
இளமையும் மாறி
வயது முதிர்ந்து
நரை பிரை வந்து
கண்கள் இருண்டு
உமிழ் நீர் திரண்டு
கல கல என்று
மல ஜலம் வந்து
ஆடிய இந்த உடம்பு
அடங்கும் நேரமும் உண்டு .....,
கோடி பணம் இருந்தும்
பிடி, ஒரு குச்சியில் இருக்கும்
மூன்று காலில் இழுத்து நடந்து
பெற்ற பிள்ளைகள் கூட
நம்மை கண்டு வெறுத்து
மூச்சு அடங்காத என
நம் நெஞ்சமும் துடிக்கும் ....,
பினி பல தின்று
ஜீவன் பிரிந்த பின்பு
கட்டையோடு கட்டையாக
தீயும் தின்று
ஒரு பிடி சாம்பலாய்
இத்தேகம் மாறி
ஓடும் நதியில்
கரைந்து ஓடும் போது
பிரிந்த ஜீவனுக்குப் புரியும் ....,
காதற்ற ஊசியும் வாராது
காண் கடை வழிக்கே ...!!
ஜீவன் நம்முள் இருக்கும்
பொழுதே அறிவோமானால்
இறந்த பின் கிடைக்கும்
அமைதி நம்முள்
என்றும் இருக்கும் .
என்றும்...என்றென்றும்
ஜீவன் .....