யுத்தத்தில் கவிதை போராளிகள் ---முஹம்மத் ஸர்பான்

பூக்கள் பூத்த போது
இலைகள் உதிர்ந்தது
வேரின்றியும் மரம்
யுகமாய் வளர்ந்தது
--அனாதை இல்லம்--

உன் எதிரியை
கொல்லும் ஆயுதம்
இதழின் புன்னகை
உன் துரோகியை
கொல்லும் ஆயுதம்
வெற்றியின் படிகள்

மனிதன் வென்ற
முதல் நோபல் பரிசு
கண்ணீர்த் துளிகள்

ஒவ்வொரு நகர்விலும்
ராஜ்ஜியம்
காக்கப்படுகிறது
சதுரங்க வேட்டை

வானம் அழுத போது
கண்கள் சிரித்தது
ஏழை வீட்டில் வெள்ளம்

ஒரு நாள் வாழ்ந்தாலும்
சாகும் வரை போராடும்
மின்மினிப் பூச்சிகள்

சவாரிகள் ஓடாவிட்டால்
எங்கள் வாழ்க்கையும் நகராது
இப்படிக்கு உழைப்பாளி

மனிதனின் வாழ்க்கையும்
தினந்தினம் சுவாசத்துக்காய்
பிச்சை எடுக்கிறது காற்றிடம்

ஒருவனின் கையெழுத்தில்
உலகத்தின் தலையெழுத்து
-திசைமாறிப் போகிறது-

பேனையின் முனை குத்தி
காகிதங்கள் கண்ணீர் சிந்தியது
யுத்தத்தில் கவிதை போராளிகள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (19-Aug-16, 7:43 am)
பார்வை : 387

மேலே