மல்லிகை சிநேகிதி

உன் கூந்தல்
மல்லிகையை சூடாத
நாளொன்றை
நான் பார்த்ததே இல்லை…

சீசன் இல்லாத காலத்தில்
காசு அதிகமாய் விற்றாலும்
நீ அதைபற்றி
யோசிக்கக்கூட முன் வருவதில்லை..

முழம் முப்பது ரூபாய் என்றாலும்
மூணுமுழம் தயங்காமல் வாங்கி
பூக்காரியின் முகத்தில்
புன்னகை பூக்கச் செய்கிறாய்..!

மலர்களில்
ஆயிரம் வகையறாக்கள் இருந்தாலும்
உன் விருப்பமென்னவோ
மல்லிகையைத் தவிர
வேறொரு மலரை விரும்புவதில்லை…

ஒரு நாள்
உன் மல்லிகை சரத்தின்மீது
எனக்குப்பிடித்த ரோஜாவை
உனக்குத் தெரியாமல் பதித்தேன்

கண்ணாடி முன்
உன்முகம் பார்க்கச் சென்ற நீ
சற்றும் தாமதிக்காமல்
ரோஜாவை பிடிங்கி காலடியில் இட்டு
கட்டெறும்பை நசுக்குவதுபோல் நசுக்கினாய்

நீ நசுக்கிய நசுக்கில்
நசுங்கியது
ரோஜா மட்டும் அல்ல;
என் இதயமும்தான்..!


சாய்மாறன்
19/8/17

எழுதியவர் : சாய்மாறன் (19-Aug-16, 8:36 am)
பார்வை : 59

மேலே