​நா முத்துதுக்குமார்இரங்கல் கவிதை

இதயத்தில் நின்றவன்
இரங்கல் கவிதையானான் ...
ஆனந்தயாழை மீட்டியவன்
ஆறாத்துயரத்தில் ஆழ்த்தினான் ...

இல்லங்களின் சூழலை
இதயங்களில் நிறுத்தினான் ...
அழகே அழகென்றவன்
அழவைத்து சென்றுவிட்டான் ...

உறவுகளின் உணர்வுகளை
உலகிற்கே உரைத்திட்டான் ...
அப்பாவென அழைக்காத
அறியாமழலையை மறந்தான் ...

எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு
எளியோர்க்கும் புரியும் உன்பாட்டு ....
கவியுலகமே கண்ணீரில் மிதந்தது
கவிதைகளே இரங்கற்பா பாடியது !

கவிதைகள் வடித்தான் காவியமானது
கவிஞனேநீ மறைந்து காவியமானாய் !
திரை உலகமே திரண்டது உன்பின்னால்
திரைக்குப்பின் உழைத்த உன்னைக் காண !

உலகோரை நினைத்து உன்னை மறந்தாய்
உடலநலம் பேணாமல் பேனா பெரிதென்றாய் !
தமிழருக்காக எழுதி தன்னையே துறந்தாய்
தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தாய் !

உள்ளங்கள் அழுதது உன்னை நினைத்து
உலகமே தவித்தது உன்னைப் பிரிந்து !
இதயத்தைத் துளைத்தன இரும்பு வரிகள்
இதயத்தில் நிலைத்தன இனிய பாடல்கள் !

மீண்டும் பிறந்துவா முத்துக் குமரா
மீண்டு வருவர் சோகத்தில் தவிப்பவர் !
குடும்பத்தை நினைத்து விரைவாக வா
அப்பாவென அழைக்கும் மகளைகாண வா !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Aug-16, 6:36 am)
பார்வை : 134

மேலே