சுதந்திரமா

புதுசட்டை போர்த்திய பாம்பெல்லாம்
பசுக்களென்று பொருள் பெறுமா??

தலைப்பை மாற்றிய கிறுக்கலெல்லாம்
கவிதைகளென்று இனித்திடுமா ??

நித்தம் நூறு களம்கண்டு
நிலைப்பதெல்லாம் மாட்சிமையா ??

கண்ணியம் காக்க தவறியப்பின்
புண்ணியம் பார்ப்பது காந்தியமா ??

அந்நியன் செய்த சுரண்டலெல்லாம்
அடுத்துள்ளவன் செய்தால் சுதந்திரமா ??

எழுதியவர் : (14-Aug-17, 9:09 pm)
சேர்த்தது : சுவாஸ்
பார்வை : 107

மேலே