பாரத மாதா வாழ்த்துக்கள்

பாரத மாதாவே நில்லு
பதிலாக வாய்பேசி சொல்லு
சுடர்விட்ட என் பாரததேசம்
சூறாவளி காற்றின் வீச்சால்
சுத்தமாய் இருட்டாகி போச்சு
சுவாசமும் இல்லாமல் ஆச்சு..!

குழந்தைகள் தெய்வங்களென்றோம்
தெய்வங்கள் பிணங்களாய் கண்டோம்
கருணை பொங்குமே அகத்தில்
கருகிய சருக்களாய் முகத்தில்
மாதாவே நீயே சொல்லு..
பச்சிளம் பாலகர் பாவியா..
உனக்கு
பசியாற குழந்தைகள் நீதியா.?

காவிகள் கையிலே
ஆட்சியெல்லாம் போச்சு
காலனாய் தினந்தோறும்
காட்சிகள் ஆச்சு
மாடுகள் தெய்வமாம்
ஆள்வோரின் பேச்சு
மனிதமோ பிணங்களாய்
அடங்குதே மூச்சு..
எழுபது தாண்டியும்
எழும்பாத என் தேசம்..
எப்படி எழுவதாய் பேசும்..
எங்குமே காவிகளின் கோசம்..

பாரதமாதாவே
படு குழியில்
நான் கிடந்தும்
பகருகிறேன்..
வாழ்த்துக்கள் ..!

எழுதியவர் : குமரி பையன் (15-Aug-17, 12:33 am)
பார்வை : 1536

மேலே