பொங்கலோ பொங்கலம்மா

பொங்கலோ பொங்கலுன்னு
பொங்குதம்மா பொங்கலு!
நேத்துவரை அனுபவிச்ச
துன்பமெல்லாம் பறக்குதம்மா!

பச்சரிசியைப் பார்க்கையில
பால்மணம் பொங்குதம்மா!
பாலகர் உள்ளமெல்லாம்
பட்டொளி வீசுதம்மா!

கும்மிகொட்டி நான்
சேர்த்த சில்லரையெல்லாம்
பொங்கலாக பொங்குதம்மா
குவலயம்தான் வழியுதம்மா!

செங்கரும்பைச் சுவைக்கையிலே
சொப்பனங்கள் தோன்றுதம்மா
என்மனச் சோலையிலே!

கார்முகிலும் காலையிலே
அருள் பனியைத் தூவுதம்மா!
கதிரவனும் கண்விழித்து
செங்கதிரை வீசுதம்மா!

எந்திரக் கலைப்பையெல்லாம்
எருதுகளைத் தொழுதம்மா!
ஏங்கி ஏங்கி நிற்குதம்மா
ஏழுலகும் ஆவின் பாலுக்கு!

பாரின் பசியெல்லாம் பறக்குதம்மா
பாமரன் நட்ட நாற்றினிலே – அவன்
பாடு மட்டும் திண்டாட்டம் ஆனதம்மா
இப்பாரை ஆள்வோரின் கொண்டாட்டத்தினிலே

ஆயிரம் தொழிலிருப்பினும் - அதில்
ஆதித் தொழி உழவம்மா!
பாரினுக்கே சோறு
படைத்தவனம்மா – நம்ம
ஆதித் தழிழனம்மா!

பொங்கலோ பொங்கலுன்னு
பொங்குதம்மா பொங்கலு!

எழுதியவர் : கோ . குப்பன் (8-Jan-17, 11:52 am)
சேர்த்தது : குப்பன் கோ
பார்வை : 380

மேலே