எச்சரிக்கை
மரத்தை வெட்டி குடிலமைத்து வாழ்ந்த மனிதன் குடிபோதைக்கு உள்ளாகி,
மகத்துவம் வாய்ந்த மரத்தை மறந்தானே!...
மரத்தால் பயன்களையெல்லாம் பெற்று கொண்டு,
அம்மரத்தை மறந்தானே!...
இயற்கையை வணங்கி, போற்றிப் பாதுகாக்க வேண்டிய மனிதன் யாவற்றையும் உடமையாக்கி விற்றுவிட்டானே...
இயற்கையை கொள்ளையிட்டுக் கொண்டே இருக்கும் இந்த மதியிழந்த மனிதர்களால்,
கோபம் கொண்டதே இயற்கை...
இனியாருக்கும் இயற்கையின் கனிவு கிடைக்காது...
பகலில் சூரியன் சுட்டெரிப்பான்...
பயிர்கள் கருகும்....
உயிர் பலி தொடரும்...
உணவு முழுவதும் விஷமாகும்...
நோயைக் குணப்படுத்தும் மருந்தே புதிய நோயை உண்டாக்கும்....
உணவின்றி மண்ணை தின்ன நேரிடும்....
எங்கும் கேட்கும் ஒப்பாரி...
ஆடம்பரம் அழியும்...
கட்டடங்கள் இடியும்...
நிலம் அதிரும்....
வெடிப்பு ஏற்படும்...
குடிக்க நீரிருக்காது....
உடல் உஷ்ணம் உயரும்...
மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்....
மாசுக் காற்றால் மூச்சுத்திணறி சாகுவது உறுதி...
மனிதர்களுக்கிடையில் சூழ்ச்சிகள் வெற்றி பெறலாம்...
இயற்கையின் சக்தியின் முன் எந்த சூழ்ச்சியும் பலிக்காது...
ஒவ்வொரு சூழ்ச்சியும் மனிதர்களின் அழிவை அவசரப்படுத்தும்....