எங்கே எனது கவிதை
எங்கே எனது கவிதை
காலைத் தூக்கம் கலைகிற நேரம்
கனவாய் வந்தது கவிதை ஒன்று
காற்றில் அதுவும் கரையும் முன்னே
கண்ணைத் திறந்து கணினியை எடுத்தேன்
லாகின்* செய்து கூகிளுள்** நுழையுமுன்
மின்கல அழுத்தம் முற்றும் போனதால்
கணினியை விடுத்து காகிதம் எடுத்து
எழுத முனைந்தால் பேனா காணோம்!
என்ன செய்வது என்று பதைக்கையில்
சின்னக் கலக்கல் அடிவயிற் றினிலே.
கவிதையின் கூவலை கொஞ்சம் தள்ளலாம்
இயற்கையின் கூவலை தள்ளல் இயலுமோ?
கடன்களை முடித்து வெளியே வருகையில்
கணினியின் மின்கல அழுத்தம் நிறைந்தது.
படுக்கையின் அடியில் பேனா கிடைத்தது !
கவிதை மட்டும் மறந்து போனது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
