நாராயணசுவாமி ராமச்சந்திரன்- கருத்துகள்

மிக நல்ல பதிவு ! ஒவ்வொரு முறை மொக்கையாகும் போதும் , அடுத்த முறை ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறோம் ஆனாலும் .......

கருத்திட்டமைக்கு நன்றி! நடப்பில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்யும்போது மக்களுக்கு ஆட்சியை மாற்ற இரண்டு ஆண்டுக்குள்ளேயே வாய்ப்பு உள்ளது, ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க தேவை இல்லை என்றே சொல்ல வருகிறேன் மற்றபடி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் ஆட்சி மாற்றம் வரும் என பொருள் இல்லை. இந்த முறையை செம்மைபடுத்த இன்னும் பல நடைமுறைகள் உள்ளன. உதாரணமாக மூன்றடுக்கு நிர்வாகம், அதாவது 1. ஊராட்சி அமைப்புகள் (ஊராட்சி , நகராட்சி, மாநகராட்சி ....),2. மாநில சட்டமன்றம், 3. பாராளுமன்றம் .என இம்முன்றுக்குமே இவ்விதமான சுழற்சி முறை தேர்தல் என்றால் இரண்டாண்டுக்கு ஒரு முறை அரசியல்வாதிகள் கட்டாயம் மக்களை தேடி வந்தே தீர வீண்டும் என்ற நிலை உருவாகும். அதாவது ஒரே பகுதியில் முதலாம் ஆண்டு (உதாரணமாக ) ஊராட்சி தேர்தலும் , 3 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலும் 5 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் வைப்பதாக இருந்தால் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கொரு முறையும் அரசியல் வாதி வாக்கு கேட்டு மக்களிடம் வந்து நிற்க வேண்டிய சூல்னிலை உருவாகும். அப்போது அவனது முந்தைய இரு வருட செயல்பாடைப் பொறுத்து மக்கள் வாக்களிக்க தீர்மானிப்பார்கள். ஆகா அரசியல் வாதியின் தலைக்குமேல் எப்போதும் ஒரு கத்தி தொங்கி கொண்டேயிருக்கும் .அதை இயக்கும் வாய்ப்பு மக்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கிடைத்துக் கொண்டேயிருக்கும்

இங்கே -இப்போது நல்ல கவிஞரென்று அடையாளப் படுத்தப்படுவோரும் கூட புலவர் பட்டயமோ அல்லது குருகுல வாசமோ சென்று தமிழ் இலக்கண இலக்கியங்களை ஐயந்திரிபற கற்றபின் கவிதை எழுத வரவில்லை. எல்லோருக்கும் எல்லாச் சமயங்களிலும் இருக்க வேண்டியது தேடல்... தேடல்.. மட்டுமே! தேடல் ஒரு கற்பகத் தரு! அது அது மட்டுமே உங்களை உண்மையான கவிஞனாக்கும். முதலில் நல்ல கவிஞர்களின் படைப்புகளை தேடிப் படியுங்கள். படித்துக் கொண்டே இருங்கள். ஒரு நாள் அதுவே உங்களையும் நல்ல கவிஞராக்கும்! நிச்சயம் இது நடக்கும் .

"சுதந்திர தினப் புறாக்களை" பறக்க விடும் போதெல்லாம், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள் மக்கள் , ஆனால் அவை கட்டாயம் திரும்பிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதோ புறாக்காரன் தான் . அரசியல்வாதிகளும் மக்களை அவ்வாறு தான் நினைக்கிறான்

மிக்க நன்றி !!
கவிதைகள் என்பவை வெறுமனே இலக்கியத்தோடு நின்று விடுவதை நான் மிக வெறுக்கிறேன் . அவை வாழ்வின் கண்ணாடியாக , வழித் தடமாக , கைகாட்டியாக ஏன் இயலுமாயின் வாழ்வாக தொடங்க வேண்டும் தொடர வேண்டும் என்பதே என் அவா .

நண்ப ,
புழுக்கம் நிறைந்த கோடை காலம் ஒன்றின் பின்மாலைப் பொழுதின் குளிர் தூரலாய் உங்கள் வாழ்த்து . இது ...இதற்காகத்தான் காத்திருந்தேன் இத்தனை நாளும் . நன்றி !

நண்பா ! மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்
எந்த ஒரு நம்பிக்கையை வளர்க்கும் முன்னமே , எல்லா விசயங்களையும் பாருங்க -படிங்க நடு நிலையில இருந்து முடிவெடுங்க !!
ஒரு சமத்துவ நாடு எப்படி இருக்கோனுமுன்னு சுவிஸ்சை பாருங்க ! இன்னும் எத்தனையோ நாடுக பல்லினம் நிரம்பி இருக்கு ஆனா உங்க இந்திய திரு நாட்டப் போல ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வெய்க்கிரவங்க யாருமில்ல !
ஏதோ ஒரு காலத்தில் சீன பேரரசன் ஒருவன் திபெத்தை ஆண்டான் என்பதை காரணம் காட்டி அதை தன்னோடு இணைத்துக் கொண்டது சீனா ! நாம் பஞ்சசீலக் கொள்கை பேசி பஞ்சாங்கம் பார்த்தோம்
வெச்சாம்பாரு ஆப்பு காஷ்மீருல கண்டம்! 32000 சதுர கிலோமீட்டர்கள் கோவிந்தா!

நான் பிரிவினை வாதம் பேச வரல ! ஆனா தங்க ஊசின்னு கண்ணுல குத்திக்க விரும்பல என்கிறேன் !
நிஜம் நிஜம் தான் ! தவறு தவறுதான் அதை நானே செய்திருந்தாலும் ....

இந்தியா என்பதே ஒரு மாய்மாலம் ! பேரினவாதப் புரட்டு !! கர்நாடகத்திலும் , கேரளத்திலும் சாலையோரம் எரிவாயு குழாய் பதித்தால் ஆபத்தில்லை , ஆனால் தமிழ்நாட்டில் விவசாய நிலத்தின் வழியேதான் கட்டாயம் கொண்டுபோக வேண்டும் எனும் உச்ச நீதிமன்ற பிடிவாதம் (இதில் தமிழனுக்கு பத்து பைசா பிரயோசனமில்லை ), காவேரி நீருக்கு கையேந்தி நிற்கும் தமிழனுக்கு திருவோடு ! ஐரோப்பாவில பத்து நாட்டுக்கு மேல பாயற நதிகள்ள கூட இந்த தில்லுமுல்லு இல்லை ! முல்லை பெரியார் பிரச்சினைக்கு தமிழன் போக வேண்டிய இடம் சுடுகாடு ! இலங்கை - மீனவர் பிரச்சினைக்கு எந்த நாய் வந்து ஏன்னு கேக்குது ? கச்சதீவை யாரை கேட்டு கொடுத்தாங்க ? எதுக்கு ? சாஸ்த்ரி - பண்டாரநாயக ஒப்பந்தம் தமிழனை பிச்சைக்காரனாக்குச்சு ! ரெண்டு தலைமுறையா இருந்தாத்தான் குடியுரிமைன்னான் , இல்லாதவன் இந்தியாவுல பிச்சைக்காரனா வந்திறங்குனான்!
நல்லா இருக்குய்யா உங்க இந்திய திருநாடும் அதுக்கு நீங்க போடுற பெத்த சலாமும்!
ஒரு சமத்துவ நாடு எப்படி இருக்கோனுமுன்னு சுவிஸ்சை பாருங்க ! இன்னும் எத்தனையோ நாடுக பல்லினம் நிரம்பி இருக்கு ஆனா உங்க இந்திய திரு நாட்டப் போல ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வெய்க்கிரவங்க யாருமில்ல !
எந்த ஒரு நம்பிக்கையை வளர்க்கும் முன்னமே , எல்லா விசயங்களையும் பாருங்க படிங்க நடு நிலையில இருந்து முடிவெடுங்க !!

மிக்க மகிழ்ச்ச்சியும் நன்றியும் தோழியே !

கல்லறை , கல்லரையல்ல !
வெறும் நிகழ்வுகளாய் எழுதாமல் உவமை, உவமேயம், படிமம் என கவிதைகளுக்கான நகாசு வேலைகளையும் செய்ய துவங்குங்கள் , மிகச் சிறப்பாக அமையும் . வாழ்த்துக்கள் !!!!


நாராயணசுவாமி ராமச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே