நடமாடும் நதிகள் 41

மின்னலை வகிடெடுத்து
மேகம் பின்னிய ஒற்றைச் ஐடை
"நடமாடும் நதிகள்"

வாருங்கள் நடமாடும் நதியோடு நடைபோட....

நடமாடும் நதிகள்
★★★★★ ★★★★

மரண பயமில்லை
கயிற்றில் நடக்கிறான்
"பசிக்கு பயந்து"
****
பற்ற வைக்கவில்லை
அணைக்கவும் முடியவில்லை
"பசியில் வயிறு" & "சாதீ"
****
வெறிச்சோடிய வானம்
விட்டபாடில்லை மழை
"ஏழையின் விழிகள்"
****
ஆபாச சுவரொட்டிகள்
அவசர அவசரமாக கிழிக்கப் படுகிறது
"பசியில் மாடு"
****
வறண்ட நிலம்
வளமான அறுவடை
விவசாயிகளின் உயிர்
****
வான்மழை இல்லை
வானுயர வளர்கிறது
விளைநில வீடுகள்
****
விசாலமான பூஜையறை வீடுகளில்
இருந்தும் இடமில்லை தெய்வங்களுக்கு
முதியோர் இல்லங்கள்
****
வித விதமான படையல்
விண்ணுலகம் சென்றவருக்கு
"வாசலில் யாசகன்"
****
சலிக்கவே இல்லை
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
மழலை முத்தம் & மழலை மொழி
****
என் தமிழுக்கில்லை பஞ்சம்
இருந்தும் வரிகளில் வைத்தேன் கஞ்சம்
"ஹைக்கூ கவிதை"
***************************************

நன்றிகள் பல
நண்பர் திரு.ஜின்னா அண்ணா
முகப்புப் பட வடிவமைப்பாளர்
திரு கமல் காளிதாஸ்
தொடர் ஒருங்கிணைப்பாளர்
திரு முரளி T N
முகப்புப் படப் பெயர் பதிப்பாளர்
திரு ஆண்டன் பெனி..

மற்றும்
நடமாடும் நதியில் கவித் தாகம் தீர்க்க வரும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...

எழுதியவர் : மணி அமரன் (17-Mar-16, 1:31 am)
பார்வை : 960

மேலே