அனாதைகள் - ஹைக்கூ

தடுக்கி விழுந்தும்
அழவில்லை
பாவம் அநாதை

என்ன சொல்ல வருகிறது?
விறகான புழக்கடை மரம் ,
பச்சைமர வாசனையாய் .

பள்ளிச் சிறுவன்
விபத்து-
அனாதையாய் புத்தகப்பை

"அப்பா அம்மா" படம்
வரையத் தெரியவில்லை
பாவம் அநாதை !

இரவெங்கும் உறக்கமில்லை
தூர வனத்தில்
மரம் வெட்டும் ஓசை

மருத்துவ - பொறியியல் கல்லூரி
நாலஞ்சு பதின்மப் பள்ளி
தொழிலதிபர் .

சில்லரை இல்லை என்கிறோம்
பிச்சைக்காரரிடம்
மனசில்லாத போதும் .

வெளிச்சமிருந்தும்
விலகி நின்றாள்
விபச்சாரி !

எழுதியவர் : (14-Mar-16, 2:36 pm)
பார்வை : 92

மேலே