ஹைக்கூ
காதலை சொன்ன கள்வன்
யாரோ ?
சிவந்த அந்திவானம் !
கரணம் தப்பினால்
மரணம்
கருவறை காலம் !
உன்னை விட
அதிகம் சிவக்கின்றன
மருதாணி கைகள் !
சொர்க்கம் கண்ட
நாட்கள்
தாய்மடி உறக்கம் !

