தேர்தல் 2016 - ஹைக்கூ
ஜனநாயகச் சுடுகாட்டில்
புதிய பிண வரவு
தேர்தல் - 2016
"கோட்செ"யுடன் கூட்டணித் தலைவர்கள்
கை கோர்த்து நின்றார்
"காந்தி"யும்
காந்தியின் முகத்தில்
எச்சில் பிராந்தி
அரசு மதுபானக் கடை
போன தேர்தலைப் போலவே
உளுத்த உத்தரத்தின் கீழே
வாக்களிக்கும் இடம்
மரவுரிகளில்
ராமர்கள்
கௌரவர் ஆட்சி
ஆளுங்கட்சிக்குத்தான்
வாக்களிக்கிறார்கள்
இறந்தவர்களும்
கற்பழித்துக் கொல்ல
நானும் துவங்கினேன்
சுவராசியச் செய்தி .
நாசிக்கில் தான்
அச்சடிக்கப்படுகிறது
ஜனநாயகமும்
ஐயாயிர ரூவா கடனுக்கு
நாணுகிட்டுச் செத்தவன் பேரு
விஜய் மல்லையா அல்ல
இறந்துபோன மக்களாட்சிக்கு
ஐந்தாண்டுக்கொருமுறை
தேர்தல் திவசம்
தலைகளின் எண்ணிக்கையே
தலைவர்களை தீர்மானிக்க
ராவணனும் கௌரவர்களும்.....
வெளிநாட்டு ஐஸ்
உள்ளூர் மூங்கில் குச்சி
"மேக் இன் இந்தியா "
எழாயிரங் கோடிக்கு
குளிர் சாதன அ( சி )றை
ஐயாயிரத்துக்கு குண்டாந்தடி
இந்தா ரேகைப் பெட்டி
என்ன பேரு சொன்னே ?
"சரஸ்வதி"ங்க