அமுதும் தேனும்

"எவ்வளவு அழகானது
இந்தப் பூக்கள்" என்று
விரல் சுட்டுகிறாய் நீ
"ஆமாம் மிக அழகானவை"
என்கிறேன்
உன் விரல்களை பார்த்தபடி நான்

"உனக்கு மிகப் பிடித்த
பூவினைச் சொல்"
என்கிறாய் நீ
நான்,
உன் பெயரைச் சொல்கிறேன்

"வண்ணத்துப் பூச்சிகளை
பிடிக்குமா?" என்கிறாய் நீ
"ஆமாம் மிகப் பிடிக்கும்"
என்கிறேன்
உன் இமைகளைப் பார்த்தபடி நான்

"தேன் மிக இனிமையானது"
என்கிறாய் நீ
"ஆமாம் மிகவும் இனிமையானது"
என்கிறேன்
உன் ஈர இதழ்களை நினைத்தபடி நான்

"கவிதை பிடிக்குமா?"
என்கிறாய் நீ
"ஆமாம் அதனால்தான்
படித்துக்கொண்டிருக்கிறேன் உன்னை"
என்கிறேன் நான்

"காதலோடு பேசியதுண்டா?"
என்கிறாய் நீ
"ஆமாம் காதல் பேசக்
கேட்டுக்கொண்டுமிருக்கிறேன்"
என்கிறேன் நான்

"பிடித்த பூக்களை
வரிசைப்படுத்து" என்கிறாய் நீ
"நீ ,
உனது இதழ்கள்
மற்றும் உனது விழிகள் "
என்கிறேன் நான்

"அமுதைப் பற்றி அறிந்ததுண்டா?"
என்கிறாய் நீ
"என்ன! முத்தமிட
அனுமதிக்கப் போகிறாயா "
என்கிறேன் நான்

"தேயாத நிலவைத்தெரியுமா?"
என வினவுகிறேன் நான்
"தெரியாதே"என்கிறாய் நீ
"கண்ணாடியில் உன் முகம் பார்"
என்கிறேன் நான்

"வளமையானவர்கள், வறியவர்களை
துன்பப்படுத்துகிறார்கள்"
என்கிறேன் நான்
"எப்படி?" என்கிறாய் நீ
உன்
திரண்ட தனங்களைத் தாங்கும்
மெல்லிய இடையைக் காட்டி ,
"இப்படி" என்கிறேன் நான் .

எழுதியவர் : (18-Dec-15, 10:51 am)
பார்வை : 90

மேலே