பிப்ரவரி 30

உனை பார்க்க காலம்
முழுவதும் காத்திருப்பேன் ...
எனை பார்க்க பிப்ரவரி 30
வருகிறாய் என்றாய்...
நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் ...
நான்கு ஆண்டுகளாய் ...
தற்பொழுது தான்
பிப்ரவரி 29 தே
வந்தது ...
ஒரு நாள்
பிப்ரவரி 30 வரும் ...
அன்று நீ எனை நிச்சயம்
பார்ப்பாய்...
உனை தான் நான்
பார்க்க தவறி விடுவேன் ...
என் மேல் கோபப் பட வேண்டாம் ...
உன் வார்த்தை பலித்திடும் ...
என் ஆசை (வாழ்க்கை) பலித்திடாது அன்று ....
அன்று உன் வார்த்தையை
பலிக்க வைக்க ...
எனை பலி செய்திடுவேன் ...
கானல் நீரில்
சவாரி செய்யலாம்
என்று உரைத்தாய் ...
அன்று உன் கண்ணீர்
துளியில் சவாரி
செய்திடுவேன்
என்று நினைக்கிறேன் ....