அசிக்கஷா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அசிக்கஷா |
இடம் | : |
பிறந்த தேதி | : 11-Feb-1965 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 0 |
வானில் வரைந்த
வண்ணக் கோடுகள் நீ ;
தேனில் குழைத்த
ஸ்ட்ரா பெர்ரி நீ.
மழையில் குளித்த
மல்லிகைப் பூ நீ ;
அந்தி மாலையில் பிறக்கும்
அழகு நிலவும் நீ .
வட்ட முக அழகியே,
என்னை திட்டம் போட்டு
கவிழ்தாயே
உன்னை கட்டம் போட்டு சுத்தினேன் ;
என்னை நட்டமாக்கிப்
போகாதே.
தனிமையைப் போக்க
கவிதைகளை எழுதினேன்.
கருத்தில்லை என்றனர்..!
தனிமையைப் போக்க
காதலித்தேன்.
பொறுப்பில்லை என்றனர்..!
தனிமையைப் போக்க
பயிர்களோடு பேசினேன்.
பைத்தியம் என்றனர்..!
தனிமையைப் போக்க
தமிழைப் படித்தேன்.
பிழைக்கத் தெரியாதவன் என்றனர்..!
தெரியாவிட்டாலும்
குண்டு குண்டான
ஆங்கிலப் புத்தகங்களை
வீட்டுத் திண்ணையில் வைத்தேன்..
ஐயோ.இவன் பெரிய படிப்பாளி என்று
ஒதுங்கிப்போக ஆரம்பித்தனர்..!
வெள்ளந்தியாய் கேட்கிறேன்
அவ்வளவு
மரியாதை தருகின்ற மொழியா,,?
அல்லது அவ்வளவு
பயங்கரமான மொழியா அது...?
புரியவில்லை எனக்கு..
மொழிகள் எனக்குப் பகையல்ல,
என்னைப் பற்றி
பேசும் இவர்களின்
அண்ணா...
எப்படி இருகிறாய்..?
பார்த்து பேசி பனிரெண்டு
மாதங்கள் ஆகிப் போயின..
நலமாக இருக்கிறாயா..?
சொர்க்கம், நரகம்
என்றெல்லாம்
சொல்கிறார்களே
நீ எங்கு இருகிறாய்..?
ஊருக்கே நல்லவனாயிற்றே
நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?
எத்தனை மருந்திட்டாலும்
எதையும் மறக்க முடியவில்லை
அண்ணா...
உன்னோடு நான் பிறந்த ஊர்
நம் இருவரையும் பெற்றெடுத்த தாய்
இருவரும் சேர்ந்து உணவு
உட்கொண்ட வட்டில்
நாம் ஒன்றாக ஊர் சுற்றிய நாட்கள்
பள்ளிப் பருவத்தில்..
நடந்து என் கால் வலிக்கும் நேரம்,
குதிரையாய் மாறிய நீ
பொதியாய் மாறிய நான்
எனக்கு உடல் நிலை
சரியில்லையாயின்
துடித்துப் போகும்
உன் மனது
கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி
என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...