புரியவில்லை எனக்கு

தனிமையைப் போக்க
கவிதைகளை எழுதினேன்.
கருத்தில்லை என்றனர்..!

தனிமையைப் போக்க
காதலித்தேன்.
பொறுப்பில்லை என்றனர்..!

தனிமையைப் போக்க
பயிர்களோடு பேசினேன்.
பைத்தியம் என்றனர்..!

தனிமையைப் போக்க
தமிழைப் படித்தேன்.
பிழைக்கத் தெரியாதவன் என்றனர்..!

தெரியாவிட்டாலும்
குண்டு குண்டான
ஆங்கிலப் புத்தகங்களை
வீட்டுத் திண்ணையில் வைத்தேன்..
ஐயோ.இவன் பெரிய படிப்பாளி என்று
ஒதுங்கிப்போக ஆரம்பித்தனர்..!

வெள்ளந்தியாய் கேட்கிறேன்
அவ்வளவு
மரியாதை தருகின்ற மொழியா,,?
அல்லது அவ்வளவு
பயங்கரமான மொழியா அது...?
புரியவில்லை எனக்கு..

மொழிகள் எனக்குப் பகையல்ல,
என்னைப் பற்றி
பேசும் இவர்களின்
வார்த்தைகள்தான்
எனக்குப் பகை..!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (20-Sep-15, 11:21 am)
Tanglish : puriyavillai enakku
பார்வை : 303

மேலே