செல்வம் சௌம்யா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செல்வம் சௌம்யா |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 14-May-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 706 |
புள்ளி | : 160 |
நான்
பத்தாம் வகுப்போடு படிப்பை.முடித்தவர்
நாதஸ்வர இசைகலைஞர்
குடும்பத்தை.சேர்ந்தவர்
காதுகேக்காத பேச்சு சரிவர வராதவர்
மாற்றுதிறனாளிகள் சாதிக்க பிறந்தவர்கள்
என்னாலும் இசை கேக்காவிட்டாலும்.கவிதையும் பாடலும் முடியும் என்ற தன்னம்பிக்கையில்
என் படைப்புகள்
எழுத்து குழுமத்துக்கு
கவிதைகளை
சமர்பிக்க இயலவில்லை
படைப்பை சமர்பிக்க.
உள்ளீடு பொறி இல்லாததால்
கவி படைப்பதை சமர்பிக்க இயலவில்லை
எப்படி சமர்பிப்பது
என விளக்கம் அளிக்கவும்
வயலெல்லாம் வியர்வையிட்டு
அளவின்றி உழைத்தாயே
ஆற்றல் கொண்டே
விலையில்லா உன்னுழைப்பில்
வேண்டியதை தந்தாயே
வேள்வி கண்டே
நிலமெல்லாம் நிற்கின்றான்
நிலையாற்ற மாந்தர்தாம்
உன் மலத்தை உண்டே
சிலையற்ற இளைஞர்தாம்
நிலையுள்ள வாழ்வாக கூடுகின்றார்
வீரம் கொண்டே
வயலெல்லாம் வியர்வையிட்டு
அளவின்றி உழைத்தாயே
ஆற்றல் கொண்டே
விலையில்லா உன்னுழைப்பில்
வேண்டியதை தந்தாயே
வேள்வி கண்டே
நிலமெல்லாம் நிற்கின்றான்
நிலையாற்ற மாந்தர்தாம்
உன் மலத்தை உண்டே
சிலையற்ற இளைஞர்தாம்
நிலையுள்ள வாழ்வாக கூடுகின்றார்
வீரம் கொண்டே
ஆடைக்குள் புகுந்தாடும் ஆனந்த பூங்காற்றே
மேனிக்குள் தென்றலாக தீண்டிவர வேண்டுமடி
சோலைக்குள் பூத்தாடும்
செம்பவள மதுமலரே
சேலைக்குள் பூவாக பூத்துவர வேண்டுமடி
கைபேசி வைத்து பேசும் விழிபேசும்
பெண்ணழகே
மை பூசி வந்தாயோ.மன்மதனை அழைப்பதற்கு
பட்டுக்குள் பளபளக்கும்
அழகிய தமிழ் மகளே
பொட்டுக்குள் நிலவாக நெற்றியிலே
நான் வரவா
வைகுண்டம்.ஆற்றினிலே
பாய்ந்தோடும் பொய்கையிலே
நீராடி போகையிலே
அலை கொஞ்சும் மனமதுவும்
மயிலாடி போகுதடி
விழி கொஞ்சும் முன்னிரண்டும்
முயல் போல நடையெடுக்க
துள்ளாத என் மனமும் துள்ளிவந்து பாடுதடி
பாவாடை மேலுயர்த்தி
கொங்கையிலே கச்சைகட்டி
நீ நீராடும் அழகினிலே
மலையோர இளங்காற்று
தென்றலாகி தீண்டுதடி
சிலையான உன்னழகில்
காற்றான தென்றலுமே
காதலோடு பேசயில
மலையான என் மனசு கலையான
விழிகொண்டு உன் மேனியிலே
நீந்துதடி
என்ன சுகம் கண்டேனோ
வஞ்சி உனை நானிழந்து
வசந்தம் வீசும் நெஞ்சினிலே
வாசமின்றி போனதடி
முத்தம் தேடும் கன்னத்திலே
வைகை ஆறு பாயுதடி
நான் பாடும் பாடலிலே மாமரத்து பூங்குயிலும் சோககீதம் சொல்லுதடி
உன்மேலே ஆசைவைத்தும்
ஆலையான என் மனசை
உலையாக்கி போனவளே
வாசமில்லா மலரதுவும் வாடிவதங்கி போவது போல்
நீ இல்லா என் மனமும்
வாடிவதங்கி போகுதடி
நான் பாடும் பாடலுமே
ஒருதலை ராகம் தானடி
நிழல் தேடும் என் நெஞ்சினிலும்
ஒருதலை காதலடி
பள்ளி பருவத்தில்
பருவத்தில் கோட்டை கட்டி
விளையாடிய நினைவுகள்
பாவாடை தாவணியில்
நீ உலவந்த போது
என் நெஞ்சம் துடித்த நினைவுகள்
பள்ளிகாலம் முடிந்த பின்னும்
பருவகாலம் முடிந்துவிட்டதோ
பருவத்தில் பூத்த காதல்
கற்பனை கோட்டை போலும் ஒருதலை
காதலெனும் கற்பனை
கோட்டையில் உன்னை தேடி தேடி
கழிந்துவிடுகிறதடி
ஏக்கத்தில் கழிந்துவிடும்
இரவுகள்
உயிரே உறங்காதே
உலகுக்கே சோறுமிட்டாய்
வந்தாரை வாழவைத்தாய்
பண்பாட்டை விதைத்து வந்தாய்
பாவிகளின் செயல் தன்னில்
உயிரை ஏன் உறங்க வைத்தாய்
உயிரே விழித்துவிடு
ஊருக்கே உறவு சொல்ல
காகம் இருக்க
உலகுக்கே வீரம் சொல்ல
தமிழன் இருக்கிறான்
ஜான்சிராணியோ
வேலுநாச்சி வீரம் கண்டே
வீரமானாள்
தற்கொலை படைகளோ
அஞ்சாத நெஞ்சடைச்சி
குயிலி அன்னையே
வழி காட்டியவை
வீர தமிழனே கோழையாக
மடிவதைவிட
வீரனாக மடிந்துவிடு
புதியதோர் உலகம் செய்வோம்
ஒவ்வொரு உதயத்திலும்
புதுமை காண்போம்
தேங்கி நிற்பதல்ல நதி
ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் மதி!