வைகுண்டம் ஆற்றினிலே
வைகுண்டம்.ஆற்றினிலே
பாய்ந்தோடும் பொய்கையிலே
நீராடி போகையிலே
அலை கொஞ்சும் மனமதுவும்
மயிலாடி போகுதடி
விழி கொஞ்சும் முன்னிரண்டும்
முயல் போல நடையெடுக்க
துள்ளாத என் மனமும் துள்ளிவந்து பாடுதடி
பாவாடை மேலுயர்த்தி
கொங்கையிலே கச்சைகட்டி
நீ நீராடும் அழகினிலே
மலையோர இளங்காற்று
தென்றலாகி தீண்டுதடி
சிலையான உன்னழகில்
காற்றான தென்றலுமே
காதலோடு பேசயில
மலையான என் மனசு கலையான
விழிகொண்டு உன் மேனியிலே
நீந்துதடி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
