ஒற்றை ரோஜாவை தலையில் சூடிய படி

அலைபேசி இரண்டும்
குறுஞ்செய்திக்காய் காத்திருக்க !
அன்பால் இணைந்த இதயம் இரண்டும்
பிரிவால் வாடி நிற்க !
உன் பார்வை என் மீது பட்டுவிட
நானும் கால்கடுக்க காத்து நிற்க !
என் பார்வை உன் மீது பட்டு விடும் என்று
உன் முகம் திருப்பி நிற்க !
ஒற்றை வார்த்தை பேச இதயம் துடிக்க
உன்னிடம் அருகே வந்தால்
தூரம் விலகி போய் நீ நிற்க !
தூள் தூளாய் இதயம் அது
உன் காலடியில் உடைந்து கிடக்க !
மாலை நேரமும் மலர் உன்
வருகைக்காய் காத்திருக்க !
மனசெல்லாம் பாரமாய்
உன் நினைவோடு நான் பூத்திருக்க !
மனம் கொய்த மல்லிகையானவளே
"மாமா " என அழைக்க மாட்டாயா
என ஏங்கி தவித்து நான் நிற்க !
இதயம் இரண்டும் பேசிக்கொள்ள
துடித்து நிற்க !
"ஈகோ " எனும் அரக்கன் வந்து
இருவரையும் தடுத்து நிற்க !
ஈர இதயம் இரண்டும் என்னதான்
செய்யும் பாவம் துடி துடிக்க !
நொடிகள் ஒவ்வன்றும்
யுகமாய் கடந்து நிற்க
நாட்கள் ஒவ்வன்றும்
நரகமாய் நம்மை கொல்ல துணிந்து நிற்க !
இரண்டு நிமிடம் நேருக்கு நேராய்
விழி நான்கும் சந்தித்து நலம் விசாரிக்க !
மௌனம் அதை உடைக்க வழியின்றி
இருவருமே தவித்து நிற்க !
வந்த வழியே நீயும் போக !
வந்த வழியே நானும் போக !
"கடிகாரமும் அறுபது நிமிடங்களை கடந்து நிற்க "
அதே இடம் !
என் கையில் உன்னைப்போலவே "ஒற்றைரோஜா "
இறுக்கமாய் அணைத்து
"ஒற்றைமுத்தம் "விழி வழியே வழிந்தோடிய
கண்ணீரோடு !
தந்தாய் !
நடந்தாய் !
திரும்பி திரும்பி
பார்த்துக்கொண்டே
ஒற்றை ரோஜாவை
தலையில்
சூடிய படி !