அவள் ஒரு தேவதை

நிலவாக வானத்தில்
நீ சென்றால்
நீர் சிந்தும் மேகங்கள்
பால் சிந்தும்...
கடலில் உன் கால் பதித்தால்
உப்பு பூக்கும் கடல்நீர்
சர்க்கரை பூக்கும்...
மற்றவர்கள் அணியும்
ஆடையில் பூவேலை
நீ அணியும் ஆடையில்
பூஞ்சோலை...
வீதியிலே நீ நடந்தால்
தேன் சிந்தும்போல
பார்க்கும் பா்ரவையேல்லாம்
உன்மேலே...