கண்ணம்மா என் நிலா
எத்தனையோ பெண்கள்
அழகாய் ,அழகின் வடிவாய் இருப்பினும்
கண்ணே ! என் முத்தம்மா
நீமட்டுமே என் கண்ணிற்கு
அழகிற்கும் அழகாய் காண்கின்றாய்
எப்படி எத்தனையோ கோள்களுக்கு
நிலவுகள் இருப்பினும் அழகு செய்ய
நம் பூமிக்கு வந்த வெண்ணிலாவின்
அழகுபோல் நம் கண்ணிற்கு
வேறு நிலவு காணுமா !